வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இந்திய நிலநடுக்கோட்டு பெருங்கடல்பகுதியில் காணப்பட்ட காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போதுஇலங்கையின் தெற்கு கடல் பிராந்தியத்திற்கும் குமரிக் கடல் பிராந்தியத்திற்கும்இடையில் காணப்படுகின்றது.
இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகரும்.
இது இலங்கையை விட்டு அப்பால் நகர்கின்ற காரணத்தினால் தற்போது நிலவும்மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் (ஏப்ரல்16) சீரடையும்.
இதனிடையே, நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின்சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது வெப்பநிலை 39°C – 45°C வரை அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இந்த வெப்பச் சுட்டெண் காரணமாக, வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வுஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.