நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் பொதுச்சபைக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் இன்று (நவம்பர் 19 )முற்பகல் 11.00 மணியளவில்
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் புதிய நிர்வாக விபரம் வருமாறு
செயலாளர் -அ. கொண்சியஸ்
தலைவர் – யோ. சுஜிவன்
பொருளாளர்- அ. அன்றுாஸ்
உபதலைவர் -எ. கலின்குமார்
உபசெயலாளர்-
கி. பேரின்பநாயகி
கணக்கு பரிசோதகர்-
டே. அனுசா
நிர்வாக உறுப்பினர்கள்
1. வே. கஸ்பஸதோமஸ்
2. கே. தமிழ்மாறன்
3. ம. கமலாதேவி
இன்றைய கூட்டத்தின் முதலாவது செயற்பாடாக நிறுவனத்தின் யாப்பு சபையில் வாசிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் நிகழ்சித்திட்ட இணைப்பாளர் மு.அமிர்தமந்திரன் தனது ஆரம்ப உரையின் போது நிறுவனத்தின் நீண்டகால இலக்கின் அடிப்படையில் யாழ்மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் அங்கத்துவம் பெற விண்ணப்பித்து இதற்கான கடிதம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் நிறுவனப் பணியினை முன்னெடுக்க உத்தேசித்துள்ளமை தொடர்பாகவும் வெளிப்படுத்தியிருந்ததுடன் நிறுவன யாப்பில் உள்ளபடி நிறுவனமானது தனது விரிவாக்கல் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்பதுடன் இவ்வாண்டில் இருந்து சந்தாப்பணத்தினை மாதம் ஒன்றிற்கு 20 ரூபா வீதம் பெற்று அங்கத்துவத்தை உறுதி செய்து கொள்ளவுள்ளதுடன் இதனை வெளிநாட்டுப்பிரதிநிதிகள் மத்தியிலும் செயற்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறப்பிடத்தக்கதாகும்.