நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான படகுகள் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் சேவையில் ஈடுபடமாட்டாது என தெரியவருகின்றது.
குறித்த பொது விடுமுறை மற்றும் வார விடுமுறை தினங்களில் பணியாளர்கள் படகுகளில் வேலை செய்கின்ற போது அவர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவை வழங்க முடியாத நிதிநிலைமை காணப்படுவதால் இக் காலப்பகுதிகளில் சேவையினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன் காரணமாக தனியார் படகுகள் சேவையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் இன்று(செப்ரெம்பர் 2) காலை 8 மணிக்கு குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து நெடுந்தீவு செல்ல வேண்டிய பயணிகள் படகு சேவையின் ஒழுங்கீனம் காரணமாக காலை 9 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்பட்டதை அறியக்கூடியதாக உள்ளது.
இதன் காரணமாக காலை நேரம் சென்று வேலைகளை முடித்துவிட்டு பிற்பகல் யாழ் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளுடன் சென்றவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், இதற்கான ஒரு மாற்றுத் தீர்வு கண்டுகொள்ள வேண்டும்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான படகுகளை சேவையில் ஈடுபடாத வேளையில் அதற்கான மாற்று ஒழுங்குகளை அவர்கள் முதல்தாளே செய்ய வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்