2024 ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவின் அனைத்துவிளையாட்டின் அடிப்படையில் யாழ் மாவட்டம் முதலாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.
கடந்த ஜூலை 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் மாகாண விளையாட்டுதிணைக்களத்தால் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில்நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில், நடைபெற்று முடிந்த மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி முடிவில் அனைத்து விளையாட்டிலும் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாவது இடத்தினையும்முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடத்தினையும் கிளிநொச்சி மாவட்டம்மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இந்த இறுதி நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள்விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறைஞ்சன் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
வடமாகாண 2024 விளையாட்டு விழாவின் முடிவடைந்த அனைத்து தனி, குழுபோட்டிகளின் அடிப்படையில்
மாவட்டங்களின் நிலைகளும் பெற்ற பதக்கங்களும்.
#1ஆம் இடம் யாழ்பாண மாவட்டம்.
தங்கம்119,வெள்ளி77, வெண்கலம்83
#2ஆம் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
தங்கம்46, வௌ்ளி40, வெண்கலம்37
#3ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம்
தங்கம்28, வெள்ளி48, வெண்கலம்39
#4ஆம் இடம் வவுனியா மாவட்டம்
தங்கம்20, வௌ்ளி33, வெண்கலம்36
#5ஆம் இடம் மன்னார் மாவட்டம்.
தங்கம்16, வெள்ளி22, வெண்கலம்28.