கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 101 பேர் உட்பட 103 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (10) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,186 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 4,628 ஆகும்.