கடந்த 100 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தின் காலநிலை வரலாற்றில்அதிகூடிய மழை வீழ்ச்சி இம் மாதத்தில் பதிவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகபுவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜாதெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழை வீழ்ச்சி 90MM ஆகும். மே மாதமழை நாட்கள் சராசரியாக 6 நாட்களே ஆகும். ஆனால், இந்த ஆண்டு மே மாதம்முடிவடையாத நிலையில் மாகாண சராசரி என்ற வகையில் திங்கட்கிழமை வரை230MM மழை கொட்டித் தீர்த்துள்ளது.
ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு பகுதி, யாழ்ப்பாணமாவட்டத்தின் வலிகாமம் பகுதி அதிக அளவிலான மழை வீழ்ச்சியைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்