பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தாவிட்டால் இன்னும் 10 வாரங்களில் இலங்கையினுள் பரவும் பிரதான வகை கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் திரிபு மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளை இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை பின்வருமாறு.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வகை திரிவு வைரஸால் இறக்கின்றனர். அதனால்தான் இந்த தடுப்பூசி வேலைத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாங்கம் தெளிவாக தீர்மானித்துள்ளது. 12 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் டெல்டா வகை வைரஸ் திரிவு பரவுவதற்கான அவதானமும் உள்ளது. பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தாவிட்டால் இன்னும் 10 வாரங்களில் இலங்கையினுள் பரவும் பிரதான வகை கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் திரிபு மாறக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே எச்சரித்துள்ளார். எனவே, ஆபத்து நீங்கவில்லை ஒரு புதிய எதிரி சுற்றித்திரிகிறான்”. என்றார்.