பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான தமிழா் உாிமைகளுக்கான போரட்டம் இன்றைய தினம் (பெப்ரவாி 05) சிவன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லீம் மக்களும் தங்களது ஆதரவினை தொிவித்து போராட்டத்தில் இணைந்துள்ளமையினை குறிப்பிடத்தக்கது.
இப்பேரணியினை 06ம் திகதி யாழ்ப்பாணத்தில் நிறைவுறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் ஆயினும் யாழ்ப்பாணம் மன்னாா் வவுனியா போன்ற பிரதேசங்களில் 06ம் திகதி வரை போரட்டங்களை நடாத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மேலும் ஒரு நாள் தாமதமாகவே யாழ்ப்பாணம் வந்தடையும் என குறிப்பிடப்படுகின்றது. மன்னாாில் இருந்து யாழ்ப்பாணம் வருவதாக தீா்மானிக்கப்பட்டடிருந்த போதும், மட்டக்களப்பில் ஏற்பட்ட எழுச்சியடுத்து கிளிநொச்சி ஊடாகவும் செல்ல வேண்டும் என சிறிதரன் தரப்பினா் விடுத்த கோாிக்கையினை அடுத்து கிளிநொச்சி ஊடாக பேரணி செல்ல தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 07ம் திகதி யாழ்ப்பாணத்தினை சென்றடையும்.