நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 இல் சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில் 04 ஆம் நாள் நிகழ்வாக நெடுந்தீவு கலாச்சார மண்டப வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
நெடுந்தீவு அனைத்து முன்பள்ளி சிறார்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான புத்தாக்க ஆடல் பாடல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
04 ஆம் நாளாகிய இன்று (ஆகஸ்ட் 07) நிகழ்வு ஐ. தயானந்தராஜா ஓய்வுநிலை அதிபர் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி பல்கலைக்கழக பேராசிரியர், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஶ்ரீகணேசன் மற்றும் விவசாய திணைக்கள அலுவலர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் , முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் நிகழ்வின் விருந்தினர்கள் சிறப்புரையினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.