வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் சுமார் 4km பகுதி முதற்கட்டமாக காப்பெற் இடும்பணி நேற்று இரவு ஆரம்பமாகியது.
புங்குடுதீவு மடத்துவெளியல் இருந்து பாலத்தின் குறிப்பிட்ட அளவு பகுதி நேற்று (ஜூன்05) காப்பெற் இடப்பட்டுள்ளது. இரவு 9.00 மணியளவில் தொடங்கிய வேலை அதிகாலை வரை இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து நெருக்கடி குறைந்த இரவு வேளைகளிலேயே இவ் வீதி திருத்தப்படவுள்ளதுடன் , இப் பணிக்கு பொது மக்கள் போக்குவரத்து தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் இலங்கை பாரளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நயினாதீவு ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி அதிவணக்கத்திற்குரியபதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே முதற்கட்ட வீதி அபிவிருத்திக்கான அனுமதி கிடைத்து வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று (ஜூன்06) காலை காப்பெற் இடப்பட்ட பகுதியினை விகாராதிபதி பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் வீதி திருத்தத்தின் மூலம் தீவுப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாவிகள் தங்கள் பயணத்தினை இலகுபடுத்திக் கொள்ளமுடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.