வேலணை பிரதேச வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணிப் பற்றாக்குறையைநிவர்த்தி செய்ய துறைசார் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவேலணைப் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும் ஜெ.அனுசியாவேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்தலைமையில்,
அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற ஊராட்சி முற்ற நிகழ்வில்கலந்து கொண்ட போதே அவர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்
தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாக மேற்படிவைத்தியசாலை காணப்படுகின்ற போதிலும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாகவைத்தியசேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுகின்றன.
கடந்த அரசாங்க காலத்தில் இந்த வைத்தியசாலை “பி” தரத்திற்குதரமுயற்தப்பட்டுள்ள போதிலும் அதற்கான ஆளணி வளங்களைஅதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எவையுமே இதுவரைமுன்னெடுக்க்கப்படவில்லை.
இரண்டு வைத்தியர்களே இங்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அங்குபல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.தாதியஉத்தியோகத்தர்கள் பற்றாக்குறையும் நீண்ட காலமாக நிலவி வருகின்றது.
வருடம் ஒன்றிற்கு சுமார் 25,000க்கும் மேற்பட்ட வெளிநோயாளர்களும்,1500க்கும் மேற்பட்டோர் விடுதிகளில் தங்கியும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உடனடியாக உரிய அதிகாரிகள் இவ் விடயத்தில்கவனமெடுத்து ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேலும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.