வேலணையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்று (ஜனவரி 25) வழங்கப்பட்டன.
உலக உணவு திட்ட அனுசரணையில் வேலணைப் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரம், சிறப்பு விருந்தினர்களாக உலக உணவு திட்ட பிரதிநிதிகள் Josphat Mushongah (Emergency coordinator), Kiran Pal (Programme Policy Officer), Musthafa Nihmath (Government Partnership Officer),varunanathan Kajananan (Programme Associate), Nadeshapillai Thevanayagam (Field Assistant) ஆகியோரும்
World Vision திட்ட முகாமையாளர் யூட்.நிசாந்தன், யாழ்ப்பாணக் கூட்டுறவு உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரம், வேலணை ப.நோ.கூ.ச பொதுமுகாமையாளர் ஆ.தவமலர், வேலணை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.