யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலானதுபாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம்(நவம்பர் 27) யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், வெள்ளப்பாதிப்புக்குட்பட்டுள்ள பகுதிகளை தாம் நேரில் சென்று பாா்வையிட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில்திட்டமிட்டு கணிசமான மாற்றங்களை மேற்கொள்ள அனைவரதும்ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கநடவடிக்கை எடுக்குமாறும், தற்போதைய நிலையில் மாவட்டத்தை வெள்ளஅபாயத்திலிருந்து பாதுகாக்க அனைவரதும் ஒருங்கிணைந்து செயற்பட ஒத்துழைப்பினை நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் அவர்களாலும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா அவர்களாலும் தற்போதைய வெள்ள அனர்த்தநிலைமைகள் தொடர்பாகவும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள்தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்த நிலைமைதொடர்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பனை அபிவிருத்தி சபைத் தலைவர், முப்படைகளின் அதிகாரிகள், துறைசாா் திணைக்களத் தலைவர்கள் மற்றும்உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.