வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பெண்கள் வெளிநாட்டுப் பிரஜைகளை திருமணம் செய்த பின்னர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, திருமணப் பதிவாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் 1800 இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துள்ள நிலையில்,
இனிவரும் காலங்களில், வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கு, பதிவாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்படவுள்ளதுடன், திருமண வயது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.