1983ஆம் ஆண்டு வெலிக்கடை வெஞ்சிறையில் வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி, முன்னணி போராளிகளான ஜெகன்,தேவன் உட்பட 53 போராளிகளின் 37ஆம் ஆண்டு நினைவு தினமாகிய இன்று மறைந்த போராளிகளுக்கும் பொது மக்களுக்கும், அத்தோடு 1985/05/15 அன்று குமுதினி படகில் நடுக்கடலில் வைத்து சுட்டும் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்ட 36 பொதுமக்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தபட்டது
இன்றைய தினம்; பிரச்சார செயற்பாட்டிற்காக வருகை தந்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா முன்னாள் வடக்குமாகண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் மற்றும் குழுவினர் இணைந்து மாவிலித் துறைமுகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர் அதனை தொடந்து பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர்.