நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து தேவையினை இலகுபடுத்தும் நோக்குடன் கரிகணன் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் வெற்றிகரமாக ஓராண்டினைப் பூர்த்தி செய்துள்ளது.
கடந்த வருடம் இதே தினத்தில் கொடிவேல் அறிவாலயத்தின் அனுசரணையுடன் பரீட்சாத்தமாக ஓரு மாத கால சேவையென ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இச் சேவை தை முதலாம் திகதியிலிருந்து கரிகாலன் படகு சேவான் உரிமையாளரின் வழிகாட்டலுக்கு அமைய இன்று ஒரு வருட சேவையினை பூர்த்தி செய்துள்ளது.
படகு சேவையானது காலை 11:30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலை 2.30 மணிக்கு குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்துமீண்டும் செல்லும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை எந்தவிதமான தடங்கல்களும் இன்றி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றதுடன் தடங்கல்கள் ஏற்படுகின்ற போது இப்படகு சேவைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இச் சேவையின் மூலம் நெடுந்தீவு பயணிகள் பெரும் நன்மைகளை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.