கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வவுனியா குருமன்காட்டில் நடந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் தப்பிச் சென்றுள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபரை கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
விபத்துக்குள்ளாகிய நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்ற நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அல்லது 071 859 13 43, 024 22 22 226 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.