இலங்கையில் வாகன விபத்துகளை காரணமாக தினசரி ஐந்து முதல் ஆறு உயிர்கள் வரை இழக்கப்படுகின்ற்ன.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் தொடர்பில் ஆய்வு நடவடிக்கைகளை இன்று புதன்கிழமை முதல் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகதொடர்பாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, சோதனை செய்யப்படுகின்ற மோட்டார் சைக்கிள்களின் தரம் மற்றும் அவற்றின் இயங்கும் நிலை போன்றவை ஆராயப்படும்.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட வீதி விபத்துக்களால் மாத்திரம் மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் தற்போது சுமார் 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றில் 56% மோட்டார் சைக்கிள்களாக காணப்படுகிறது.
மேலும், பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 16% ஆகும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் திருகோணமலையில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் விபத்தில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.