இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெற்றுள்ளது. இதற்கமைய, அக்கட்சியினால் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.