வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் சட்டவிரோதமான கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி மீனவர்களால் இன்று (பெப்ரவரி 13) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர்.
இதனடிப்படையில் நாளைய தினம் இந்த விடயம் தொடர்பில் ஆராய 55 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் ஒன்று கூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவரை போராட்டத்தை கைவிடுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் போராட்டத்தை கைவிடுவதாகவும் நாளைய தினம் ஒரு நல்ல முடிவு ஒன்று எடுக்கப்படாத பட்சத்தில் தம்முடைய போராட்டம் தொடரும் ஏன்றும் தெரிவித்தனர்.
நீரியல் வளத்துறை மற்றும் கடத்றொழில் அமைச்சால் விடுக்கப்பட்ட கட்டளைகளை கடற்படையினர் செயற்படுத்துவதில்லை என்றும், சட்ட விரோத தொழிலில் ஈடுபாடுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் மீனவர்களால் பிரதான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.