குறிகட்டுவான் நெடுந்தீவு இடையேயான கடற்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகைப் படகு திருத்தம் மற்றும் பராமரிப்பு சேவைக்காக கடந்த திங்கட்கிழமை முதல் (ஜீலை 13) நிறுத்தப்பட்டுள்ளது. வடதாரகை படகு நீண்ட நாட்களாக பராமரிப்பு செயற்பாடுகள் செயற்படுத்தப்படாமையினால் அதனை உடனடியாக பாரமரிப்பு சேவைக்கு உட்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதால் பராமரிப்பு செயற்பாட்டிற்காக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
போக்குவரத்து நிலமைகளைக் கருத்திற் கொண்டு தனியார் படகு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அதற்கு பதிலாக தனியார் படகுகளை சேவைக்கு அமர்துவதற்கான முயற்சிகளை நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ.சி.சத்தியசோதி அவர்கள் மேற்கொண்டு அதற்கான நேர அட்டவணையினை வழங்கியுள்ளார்.
குமுதினிப்படகு சேவை வழமையான நேரத்திற்கு சேவையில் ஈடுபடும் நேற்றைய தினம் (ஜீலை 16) குமுதினிப்படகு பழுதடைந்து போக்குவரத்து தடைப்பபட்ட போதும் விரைவாக செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை திருத்தம் செய்து மாலை 4.00 மணிக்கான நெடுந்தீவு சேவை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.