நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வடதாரகைப்படகு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது.
இன்றைய தினம் (ஜீலை 21) காலையில் நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் வருகை தந்த வடதாரகைப்படகில் பயணித்த நெடுந்தீவினை சேர்ந்த ஒருவருக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் கொரோனா பாதுகாப்பு நிலமையினைக் கருத்திற் கொண்டு தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சேவைக்கு திரும்பும் வரைக்கும் வடதாரகை சேவைக்கு பதிலாக நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவா படகு சேவையில் ஈடுபடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தி பிரயாணம் செய்யவேண்டியது மக்கள் பொறுப்பாக காணப்படுகின்றது.