வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக இன்று வடக்குக் கடலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில் பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 40 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாவது தொகுதி பேரூந்துகளை ஏற்றிய சாயுரு எனும் கடற்படைக் கப்பல், அடையாளப் படுத்தப்பட்ட கடல் பகுதியை நோக்கிய தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.