யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதிஅவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டச்செயலகத்தில் இன்று (டிசம்பர்13 ) காலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன்இளங்குமரன், வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின்செயலாளருமான தமருதலிங்கம் பிரதீபன் அவர்களும் பங்குபற்றினார்கள்.
மேலும், கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல்பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்டபதவிநிலை உத்தியோகத்தர்களும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.