தொடர்ந்தும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ள அபாயம் நீடிப்பதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 22624 குடும்பங்களை சேர்ந்த 75013 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.சூரியராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யாழ்.மாவட்டத்தில் தற்போது 21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 387 குடும்பங்களை சேர்ந்த 1332 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 93 வீடுகள் முழுமையாகவும், 2970 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.