வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நேற்று (டிசம்பர் 14) யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற டெங்கு மீளாய்வு கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. க. கனகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுகாதார சேவைகள் பணிமனைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரடியாகவும் சூம் செயலி ஊடாகவும் கலந்துக்கொண்டனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் எனினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் காணப்படுவதாகவும் அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் சுகாதார துறைசார் அதிகாரிகளும் சூம் செயலி ஊடாக தெரிவித்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அதிகாரிகளால் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
அதற்கமைய டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கவும் பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் ஆலோசனை வழங்கினார். வடிகான் துப்பரவு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கைவிடப்பட்ட மற்றும் பராமரிப்பற்ற காணிகளில் நுளம்பு பெருகுவதை தடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். பராமரிப்பற்ற காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்களுக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கௌரவ ஆளுநர் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். டெங்கு ஒழிப்பு செயற்பாடுக