யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராக அ.சிவபாதசுந்தரத்தை நியமிப்பதற்கான அனுமதிய இன்று (ஜனவரி 16) அமைச்சரவை வழங்கியுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர்.
2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றியதுடன், மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகவும் இவர் கடமையாற்றியிருந்தார்.
இவர் ஆளுமை மிக்க நிர்வாகி, ஆக்க இலக்கிய கர்த்தா, சமூக அக்கறையாளன் என்ற பன்முகத்தன்மை கொண்டவராவார்.