யாழ். பல்கலைக்கழக ஆங்கிலத்துறை வருகைதரு பெண் விரிவுரையாளர் ஒருவர் யாழ்ப்பாணம் நீராவியடிக்கு அண்மித்த பகுதியில் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் தொற்று உறுதியான கொழும்பு கோட்டல் உரிமையாளரின் மகனின் துணைவியாரான வருகைதரு விரிவுரையாளரும் அருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபரின் மகன் நல்லூர் வீரகாளி அம்மன் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீட்டுக்கு சென்று வந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில் மகனின் குடும்பமும் தனிமைப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விரிவுரையாளர் உட்பட்ட குடும்பத்தாருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இருந்தபோதிலும் குறித்த குடும்பத்தினை தொடர்ந்தும் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகரமாக வட்டாரங்கள் தெரிவித்தன.