யாழ்ப்பாணம்–ஆரிய குளப் பகுதியில் , வடமாகாண தொழிற்துறைத்திணைக்களமும்–பனை அபிவிருத்திச்சபையும் இணைந்து “கற்பகம்” பனை சார்மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை நிலையம் நேற்றையதினம் (பெப்.13) திறந்து வைக்கப்பட்டது.
பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வி.சகாதேவன் தலைமையில் இடம்பெற்றமேற்படி திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக பெருந்தோட்டப்பிரதிஅமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டு விற்பனை நிலையத்தைதிறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வனஜா, பனை அபிவிருத்திச் சபையின் பொது முகாமையாளர்,வட மாகாணகைத்தொழில் திணைக்கள உதவிச் செயலாளர்,பனை அபிவிருத்திச் சபையின்உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.