யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும்யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாதலைமையிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின்இணைத் தலைவருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின்இணைத்தலைமையிலும் இன்று (ஏப்ரல்18) காலை யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு,
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்டமுன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், பாடசாலை ஆரம்ப மற்றும் முடியும் நேரங்களில் பாடசாலை வீதிகளில் கனரக வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தல்,
எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும்குடும்பங்களுக்கான அரிசி விநியோக திட்டம் மற்றும் வரட்சிக்கால குடிநீர்விநியோக திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீதிஅபிவிருத்திகள், யாழ் நகரத்தில் பொது மலசலகூடம் அமைத்தல், போக்குவரத்துசேவைகள், சட்டவிரோத செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.