இந்தியாவின் நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாசார நிலையம் இன்று மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கலாசார நிலையத்தில் இன்று நிகழ்வுகள் நடைபெற்ற மண்டபத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சரஸ்வதி மஹால் என்று பெயர் சூட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் கலாசார நிலையத்துக்கான அடிக்கல் 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நடப்பட்டது.
11 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார நிலையம் 600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடம் , நவீன வசதிகளுடனான அரங்கம் மற்றும் நூதனசாலை போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.