மன்னசிங்கம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று(ஓகஸ்ட் 6) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அன்னாரது இளநிலை சட்டத்தரணிகளினால் குறித்த கூட்டம் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடத்தப்பட்டது.
இதன்போது சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரையாற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, தவத்திரு வேலன் சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற் குணராஜா, நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு வலய முன்னாள் உப தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபி மன்னசிங்கம் ஜூன் 19 ஆம் திகதி தனது 77ஆவது வயதில் காலமானார்.
யாழ்ப்பாண மாவட்டச் சட்டத்துறையின் வளர்ச்சிக்கு அவர்ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து இந்த நினைவஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.