இவ்வருடம் யாழில் மதுப்பாவனை குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாழ்ப்பாண மதுவரி திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர் , வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த (2019) ஆண்டுடன் ஒப்பிடும் போது பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளது.
2019ஆம் ஆண்டு 21 இலட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றது. எனினும் இவ்வருடம் கடந்த ஆறு மாத புள்ளிவிவரங்களின்படி 7 இலட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளது.
வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 21% வீதத்தால் குறைவடைந்துள்ளது.
வெளிநாட்டு சாராய நுகர்வும் 1.74 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. ஆனால் உள்ளூர் சாராய பாவனை 2.6 வீதமாக அதிகரித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.