யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிட தொகுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடம்போதுமானதாக இல்லை என கூறி வியாபாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது “வலி,தெற்கு பிரதேசசபையே வியாபாரிகள் வயிற்றில் அடிக்காதே” என்ற கோஷத்துடன் வியாபாரிகள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் “மக்கள் பிரதிநிதிகளான உங்களுக்கு எங்களை மக்களாக தெரியவில்லையா” “எமக்கு உரிய இடத்தினை பழையதுபோல் நிறைவாகத் தாருங்கள்”.
“உங்களுடைய முதலாலித்துவ அதிகாரத்தை ஏழைப் பாட்டாளிகள் மீது திணிக்காதே.”. “வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்” ,என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
அத்தோடு தமக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமரின்
ஒளிப்படங்கள் அடங்கிய பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தாங்கியிருந்தனர்.