யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொதிகளை புதைத்து வைத்திருந்த நிலையில் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த காட்டுப்பகுதிக்குள் போதை பொருள் புதைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய நேற்று (ஜனவரி 5) வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு செய்து தேடி வந்துள்ளனர்.
இரண்டு மணி நேரமாக கடற்படையினர் தேடுதல் நடத்திவந்த நிலையில் 55Kg பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது