யாழில் இன்று மாலை வரை 49,280 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படதென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்
யாழ்.மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் இன்று மாலை வரை மொத்தமாக 49,280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றன. இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மே 30 ஆம் திகதி 2947 பேருக்கும், மே 31 ஆம் திகதி 6123 பேருக்கும், ஜூன் 1 ஆம் திகதி 13,822 பேருக்கும், ஜூன் 2 ஆம் திகதி 23,454 பேருக்கும், ஜூன் 3 ஆம் திகதி 1740 பேருக்கும், மொத்தமாக 48,086 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் 1194 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இன்று மாலை வரை மொத்தமாக 49,280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்தார்