“இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி தனது பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார் தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் முதலமைச்சர் சி .வி விக்னேஸ்வரன்.
இந் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம் கே.சிவாஜிலிங்கம், சிற்பரன் ஆனந்தி சசிதரன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்