முல்லைத்தீவு மாவட்ட விவசாய விருதுகள் மற்றும் தொழில்துறை மேன்மைவிருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (மே16) முல்லை மாவட்ட அரசாங்கஅதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன்மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்து விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
இந் நிகழ்வில் ஆறு தொழில் முனைவோருக்கு தொழில்துறை மேன்மைவிருதுகளும் ஐந்து விவசாயிகளுக்கு விவசாய மேன்மை விருதுகளும்வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் மாவட்டத்தில் சிறப்பாக செயற்படும் விவசாயிகள் மற்றும்தொழில்துறையினர் 73 பேரை கௌரவித்து ஊக்கப்படுத்தி சான்றிதழ்களும்வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின்செயலாளர் ஆ.சிறி , சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாயத்தினைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.ச.செந்தில் குமரன், வடக்கு மாகாணதொழில்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.செ.வனஜா, வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் தலைவர் ந.உருத்திரமூர்த்தி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்(நிர்வாகம்), மாவட்ட செயலகமேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயகாந்(காணி), மாவட்ட பிரதம உள்ளகக்கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், ஏனைய பதவிநிலைஉத்தியோகத்தர்கள், விவசாயிகள், தொழில்த்துறையினர் எனப் பலரும் கலந்துசிறப்பித்தனர்.