நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி மாணவா்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.
கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவிப் புயலின் தாக்கத்தால் பாதிப்படைந்த சிறாா்களின் மனங்களை மகிழ்ச்சி அவா்களின் எதிா்காலத்தினை ஒளி மயமாக்கும் நோக்குடன் தற்போது தோ்வு செய்யப்பட்ட கடனா மக்கள் அமைப்பின் 20வது நிா்வாக சபை தனது முதற் செயற்றிட்டமாக இதனை மேற்கொண்டுள்ளது.
இச் செயற்பாட்டின் 07 முன்பள்ளிகளிலும் கல்வி பயிலும் 132 சிறாா்களுக்கு ரூபாய் 1,000.00 வீதம் வழங்க எண்ணி 500.00 அவா்களது புத்தகத்தில் சேமிப்பாக வைப்பிலிடப்படுவதுடன், 500.00 பணம் நத்தாா் அன்பளிப்பாக சிறாா்களுக்கு வழங்கப்பட்டது.
நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போா் கூடத்தில் கடந்த வியாழக்கிமை (டிசம்பா் 24) இடம் பெற்றது பிரதேச செயலாளா் திரு.எவ்.சி.சத்தியசோதி மற்றும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் நெடுந்தீவுக் கிளைத் தலைவா் திரு.செ.மகேஷ் அவா்கள் இணைந்த முன்னெடுத்திருந்தனா்
நிகழ்வில் முன்பள்ளி பெற்றோா்கள், ஆசிாியா்கள், பிள்ளைகள் என பலரும் கலந்து கொண்டனா்.