முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று(ஜனவரி25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும்குற்றங்களை யோஷித ராஜபக்ஷ செய்ததற்கு போதுமான ஆதாரங்கள்இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, யோஷித ராஜபக்ஷ தொடர்பாக குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைதுஇடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குஅழைத்து வரப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷிதராஜபக்ஷ, இன்று காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தநுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார். குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய்மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவைசந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமாஅதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குஅறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.