இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம்முடக்கப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்தஇணையத்தளம் மீதான சைபர் தாக்குதல் உள்நாட்டில் உள்ள இணையஇணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம் காணசர்வதேச உதவி கோரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில்மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொலதெரிவித்தார்.
இது தொடர்பான அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கை கல்விஅமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு உள்ளான கல்விஅமைச்சின் இணையத்தளம் இன்னும் செயலற்ற நிலையில் உள்ளமையும்குறிப்பிடத்தக்கது.