யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வளி தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்று (மார்ச் 13) முற்பகல் 11 மணி நிலவரப்படி யாழ்ப்பணம், வடக்கு மாகாணத்தில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீடானது 101 முதல் 150 வரை உள்ள பிரதேசங்களில் வசிக்கும் சிறார்கள், முதியோர் மற்றும் சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
151 முதல் 200 வரையிலான பிரதேசங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பாதகமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான இடங்களில் உள்ள மக்கள் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.