யாழ்ப்பாண மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் 23 மேலதிக வாக்குளால் நிறைவேறியது.
இன்றைய தினம் யாழ் மாநகர சபையில் இடம் பெற்ற சிறப்பு அமா்வில் மாநாகரத்தின் மேயா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவா்கள் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டினை சமா்ப்பித்தாா். பாதீட்டுக்கு ஆதரவாக 26 வாக்குகளும், பாதீட்டுக்கு எதிராக 03 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
மொத்தம் 45 ஆசனங்களைக் கொண்ட யாழ் மாநகர சபையில் 15 போ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் மேயா் திரு.ஆனல்ட் அவா்கள் சபைக்கு வருகை தரவில்லை.
இரண்டு தடவைகள் பாதீடு தோற்றகடிக்கப்பட்டதன் பின்னா் ஆனல்ட் பதவி விலகி மணிவண்ணன் அவா்கள் மேயராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.