பணி அழுத்தம் உட்படப் பல்வேறு காரணங்களால் மாதாந்தம் 40 முதல் 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து வெளியேறுகின்றனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் குறைப்பு, சேவைக் காலம் 8 மணித்தியாலங்களுக்குள் உட்படாமை, ஐந்து ஆண்டு விடுறையில் வெளிநாடு செல்வது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து வெளியேறுகின்றனர்.
சேவையை விட்டு விலகும் பெரும்பாலானவர்கள் 5 வருடங்களுக்கும் குறைவான சேவையைக் கொண்டவர்கள் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.