எதிர்வரும் மூன்று மாதங்களில், கோம்பயன்மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செயற்படுத்தப்படுமென, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 12) இடம்பெற்ற ஊட கச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்த போது, கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டி அமைப்பதற்காக யாழ். மாநகரசபையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, உரிய காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணி சீரமைக்கப்பட்டு, மதில்சுவர் அமைக்கப்பட்டு எரியூட்டி இயந்திரம் பொருத்தப்படவுள்ளது. குறித்த இயந்திரம் எதிர்வரும் மூன்று மாதங்களில் செயற்படுத்தப்படுமென நம்புகின்றேன்.
அதற்கு முன்னர், தெல்லிப்பழை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் எரியூட்டிகள் செயற்படும் இடங்களில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுகின்றன.
மருத்துவக் கழிவுகள் அளவுக்கு அதிகமாகும் போது, தென்னிலங்கையிலுள்ள தனியார் எரியூட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் மேலும் கூறினார்.