திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மரபுவழி ஆற்றுகையாளரை ஊக்கப்படுத்தவும் நலிந்து செல்லும் கூத்துமரபுக்கு புத்துயிர் கொடுக்கவும் ‘யாழ்ப்பாண தென்மோடி கூத்து ஓராள் ஆற்றுகைப் போட்டி’ அடுத்த மாதத்தில் நடத்தப்படவுள்ளது.
மூன்று பிரிவுகளாக நடத்தப்படவுள்ள இப்போட்டியில் முதலாம்,இரண்டாம் பிரிவுகள் பாடசாலை மாணவர்களுக்காகவும்,மூன்றாம் பிரிவு திறந்தபோட்டியாகவும் அமையவுள்ளது.
இப் போட்டிக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
முதலாம் பிரிவில் தரம் 6 தொடக்கம் 9 வரையிலான மாணவர்கள் பங்குபற்றலாம்.முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு முறையே 10000.00,7000.00,5000.00 வழங்கப்படும்.
இரண்டாம் பிரிவில் தரம் 10 தொடக்கம் 13 வரையிலான மாணவர்கள் பங்குபற்றலாம்.முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு முறையே 12000.00,7000.00,5000.00 வழங்கப்படும்.
மூன்றாம் பிரிவு திறந்தபோட்டியாக நடைபெறும்.இதில் 20 வயது தொடக்கம் 35 வயது வரையிலான ஏனையவர்கள் பங்குபற்றலாம். முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு முறையே 20000.00,15000.00,10000.00 வழங்கப்படும்.
ஒருவரே தனி ஆற்றுகையாளராக பங்கேற்கும் இப்போட்டியில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குபற்ற முடியும்.
போட்டியாளர்கள் சுயமாகத் தயாரித்த விண்ணப்பப் படிவத்தை 05.10.2023 வியாழக்கிழமைக்கு முன்பாக, ‘யாழ்ப்பாண தென்மோடிக் கூத்து ஓராள் ஆற்றுகைப் போட்டி’ எனக் குறிப்பிட்டு திருமறைக் கலாமன்றம் , இல.238,பிரதான வீதி,யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு நேரடியாக ஒப்படைக்கலாம் அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம்.இவைதவிர 077 4028031,077 6692657 என்னும் தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ் அப் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.