மன்னார் பள்ளிமுனை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1560 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மன்னாரை தளமாகக் கொண்டுள்ள 54 ஆவது படைப்பிரிவின் படைவீரர்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9.3 மில்லியன் ரூபா பெறுமதியான உலர்ந்த மஞ்சள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.