TELL IGP (பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்) மற்றும் l-need சேவைகளைபுதிய வடிவத்தில் ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சேவைகள் நேற்றையதினம் (ஜனவரி06) பதில் பொலிஸ் மா அதிபர்பிரியந்த வீரசூரியவினால் பொலிஸ் தலைமையகத்தில் வைபவ ரீதியாக அறிமுகம்செய்து வைக்கப்பட்டது.
பொதுமக்களுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்படுவது மற்றும் அவர்களின்பிரச்சினைகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பது போன்ற நோக்கத்துடன்இலங்கை பொலிஸ் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
TELL IGP (பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்) திட்டத்தின் மூலம், பொதுமக்கள் நேரடியாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடுகள், கருத்துக்கள்மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
மேலும், TELL IGP சேவையின் ஊடாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குநேரடியாகக் கொண்டுவரப்பட வேண்டிய விடயங்கள், பொலிஸ் நிலையங்களில்விசாரணை செய்யப்படாத முறைப்பாடுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின்தவறுகள் குறித்து 24 மணி நேரமும் முறைப்பாடு செய்யலாம்.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ்ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கைப்பேசி தொலைந்து போனால் பொலிஸ் நிலையம்செல்லாமல் இணையவழி ஊடாக தொலைந்து போன கைப்பேசி தொடர்பானதகவல்களை வழங்கி முறைப்பாடு அளிக்கும் வசதியை I-need சேவைவழங்கியுள்ளது.
தொலைந்து போன கைப்பேசியை ஒருவர் பயன்படுத்தினால், முறைப்பாட்டாளருக்கு இந்த சேவையின் ஊடாக அறிவிக்கப்படும்.
மேலும், www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குபிரவேசித்து E-Services ஊடாக TELL IGP மற்றும் l-need சேவை மூலம் இந்தசேவைகளை அணுக முடியும் எனவும், 24 மணி நேரமும் முறைப்பாடு செய்யசந்தர்ப்பம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.