தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலா 5 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பொருளாதாரம் நலிந்த 110 குடும்பங்களுக்கு இன்று (ஜனவரி 12) வழங்கப்பட்டன.
யாழ். மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
நிர்த்தனகுமாரன் ராஜி மற்றும் ஹெலன் தேவராஜன் ஆகியோரின் நிதி உதவியில் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
உதவி மாவட்ட செயலாளர், சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.