இலங்கையில் கொவிட் வைரஸூக்கான பைஸர் தடுப்பூசியை அவசர நிமித்தம் பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
தொற்றாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஆரம்ப சுகாதார நலன் தொற்றுநோய் மற்றும் கொவிட் வைரஸ் கட்டுப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கம் ஏற்கனவே ஐந்து மில்லியன் பைஸர் தடுப்பூசிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பைஸர் தடுப்பூசி 95 சதவீதம் வினைத்திறன் மிக்கதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.